இலங்கை கடற்படை விரட்டியதில் மீனவர் ராஜ்கிரண் உயிரிழப்பு; மீனவரின் உடலை பெறுவதில் தாமதம்

கோட்டைப்பட்டினம்: கடலில் மூழ்கி உயிரிழந்ததாக இலங்கை கடற்படையினர் கொண்டு சென்ற கோட்டைப்பட்டின மீனவரின் உடலை பெற சென்ற அதிகாரிகள் ஏமாற்றத்துடன் கரை திருப்பியுள்ளனர். கோட்டைப்பட்டினத்திலிருந்து மீன் பிடிக்க சென்ற போது இலங்கை கடற்படை விரட்டியதில் படகு மூழ்கியதில் ராஜ்கிரண் என்ற மீனவர் உயிரிழந்தார். அவரது உடலை கைப்பற்றிய இலங்கை கடற்படை கடலில் தத்தளித்த மேலும் இரண்டு மீனவர்களை பிடித்து சென்றது. உடற்கூறாய்வுக்கு பின் மீனவரின் உடல் நேற்று இலங்கையில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இன்று அதிகாலை 6 மணி அளவில் சர்வதேச எல்லையில் வைத்து மீனவரின் உடல் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்படும் என தகவல் வெளியாகியிருந்தது. அதற்காக நள்ளிரவு 2 மணியிலிருந்து இரண்டு அதிகாரிகள் மற்றும் 9 மீனவர்கள் கடலில் காத்திருந்தனர் இலங்கையிலிருந்து எந்த தகவலும் வராததால் ஏமாற்றத்தோடு அதிகாரிகள் மற்றும் மீனவர்கள் குழு கரை திரும்பியது. மீனவர்கள் மீட்கப்படாததால் 3வது நாளாக கோட்டைப்பட்டினம் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்கின்றனர். ராமநாதபுரம், தஞ்சை மாவட்ட மீனவர்களும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.                                        

Related Stories: