நாகப்பட்டினம் கண்காட்சியில் ஜெயலலிதா புகைப்படத்தை இடம்பெற செய்ய வேண்டும்: அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை:நாகப்பட்டினம் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் மாவட்டமே விழாக் கோலம் பூண்டுள்ளது. இதற்கான விழா ஐந்து நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பதால் ஜெயலலிதா தொடக்க விழாவில் கலந்துகொண்ட புகைப்படத்தினை கண்காட்சியில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.எனவே, முதலமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு, புகைப்பட கண்காட்சியில் ஜெயலலிதா தொடக்க விழாவில் பங்கு கொண்ட புகைப்படத்தினை இடம்பெறச் செய்ய வேண்டும்.

Related Stories:

More
>