100 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி இந்தியா வரலாறு படைத்திருக்கிறது என பிரதமர் மோடி பெருமிதம்; #VaccineCentury ஹேஷ்டேக் ட்ரெண்டிங்!!

டெல்லி : சீனாவிற்கு அடுத்தபடியாக 100 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை படைத்துள்ளது. இதனையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா, நிதி ஆயோக் சுகாதாரத் துறை உறுப்பினர் வி.கே.பால் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்தியாவில் கடந்த  ஜனவரி 16 முதல் தடுப்பூசி போடுவது துவங்கிய நிலையில், 9 மாதங்களில் 100 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது.100 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்திய 2வது நாடு என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது.ஏற்கனவே சீனா முதல் நாடாக 100 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளது.

இந்த நிலையில், இது தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், 100 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி இந்தியா வரலாறு படைத்திருக்கிறது. நாம் இந்திய அறிவியலின் மாண்பை, கூட்டுமுயற்சியின், செயலாக்கத்தின் வெற்றியைக் கண்டு கொண்டிருக்கிறோம். இந்தியாவின் விஞ்ஞானம், சுறுசுறுப்பு, 130 கோடி மக்களின் உற்சாகமே சாதனைக்கு காரணம். வாழ்த்துகள் இந்தியா. 100 கோடி தடுப்பூசி செலுத்திவிட்டோம். மருத்துவர்கள், செவிலியருக்கு நன்றி. இந்த சாதனையை எட்ட உதவி ஒவ்வொருவருக்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார். #VaccineCentury என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

Related Stories:

More
>