காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி...காவல்துறை டி.ஜி.பி., உயர் அதிகாரிகள் மரியாதை..!!

சென்னை: காவலர் வீர வணக்க நாளை ஒட்டி சென்னை காவலர் தலைமை அலுவலகத்தில் உள்ள நினைவு சின்னத்தில் தமிழக காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திர பாபு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். காவல்துறையில் பணிபுரிந்து வீரமரணம் அடைந்த காவலர்களின் நினைவாக ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 21ம் தேதி வீர வணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, காவலர் வீர வணக்க நாளை ஒட்டி உயிர் நீத்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தில் உள்ள காவலர் நினைவு சின்னத்தில் தமிழக காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திர பாபு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.

132 குண்டுகள் முழங்க காவலர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய தமிழக காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திர பாபு, மக்கள் அமைதியாக, சுதந்திரமாக வாழ காவல்துறை அதிகாரிகள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர் என்று குறிப்பிட்டார். தீவிரவாதத்தை எதிர்த்தும் காவலர்கள் உயிர் தியாகம் செய்துள்ளனர் என்றும் டி.ஜி.பி. சைலேந்திர பாபு நினைவு கூர்ந்தார். இதேபோல் காவலர் வீர வணக்க நாளை ஒட்டி நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள நினைவு தூணில் காவல்துறை உயர் அதிகாரிகள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

நெல்லை  மாவட்டம் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள நினைவு தூணில் நெல்லை மாநகர காவல்துறை ஆணையர் செந்தாமரை கண்ணன், நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபினவ், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதை தொடர்ந்து 18 காவலர்கள் 3 முறை வானத்தை நோக்கி சுட்டு 54 குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Related Stories: