ஆர்.கே.பேட்டை அருகே வெடியங்காடு ஏரியில் நீர் கசிவு

* கொட்டும் மழையில் எம்.ஏல்.ஏ ஆய்வு

* மணல் மூட்டைகள் அடுக்கி நீர் கசிவு அடைப்பு

பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை பகுதியில் தொடர் மழை காரணமாக நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றது. 80 சதவீதம் ஏரிகள் நிரம்பி வழிகின்றது. இந்நிலையில்  வெடியங்காடில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான ஏரி முழு கொள்ளளவு நிரம்பிய நிலையில் ஏரிக்கு மழை நீர் வரத்து அதிகரித்துள்ளதால், கரையோரத்தில் கசிவு ஏற்பட்டு வெள்ளம் அங்குள்ள  விவசாய நிலங்களை மூழ்கடித்தது. மேலும் கசிவு அதிகரிக்கும் என்று கிராம மக்கள் அச்சமடைந்து எம்.எல்.ஏ விற்கு தகவல் தெரிவித்தனர்.

இதனை அடுத்து கொட்டும் மழையில் ஏரிப் பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்ட எம்எல்ஏ  சந்திரன்  ஏரியில் கசிவு ஏற்பட்டு அப்பகுதியில்  விவசாய நிலங்கள் மூழ்கடித்தை பார்த்து மேலும் பாதிப்பு  ஏற்படாம இருக்க பொதுப்பணித் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளுக்கு கொடுத்த தகவலின் பேரில் அதிகாரிகள் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்து மணல் மூட்டைகள் அடுக்கி கசிவு அடைத்தனர். இதனால் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டது.

Related Stories:

More
>