சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் வாலிபர் கைது

அண்ணாநகர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருமங்கலம் பகுதியை சேர்ந்த 43 வயதுடைய பெண் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், 17 வயது மதிக்கதக்க தனது மகளிடம்  ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு கொடுத்து வரும் வடமாநில வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதையடுத்து, திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் அந்த வாலிபரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். அதில் அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த பிக்கிராஜ் சாய்சியா(24) என்பதும், திருமங்கலம் பகுதியில் தங்கி வசித்து டெய்லர் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. மேலும், 17 வயது சிறுமியிடம் காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி திருமணம் செய்து கொள்வதாக பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, கைது செய்யப்பட்ட பிக்கிராஜ் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories:

More
>