தனது இருப்பை காட்டிக்கொள்வதற்க்காக எவ்வித ஆதாரமும் இன்றி அண்ணாமலை அரசு மீது அவதூறு பரப்புகிறார்: அமைச்சர் பதிலடி

சென்னை: தனது இருப்பை காட்டிக்கொள்வதற்க்காக எவ்வித ஆதாரமும் இன்றி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அரசு மீது அவதூறு பரப்புவதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார்.  மின்வாரியத்தில் ஊழல் நடப்பதாகவும் அவை தொடர்பான ஆவணங்களை வெளியிடுவோம் என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார்.

குஜராத், ஆந்திரா ஆகிய மாநிலங்களை விட மிக குறைவாக 1.04% மின்சாராம் மட்டுமே 1 யூனிட் இருபது ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டதாக கூறினார். ஆனால் மின்வாரியம் மீது அண்ணாமலை அவதூறு பரப்புவதாகவும் அவர் கூறும் முறைகேடு தொடர்பான ஆவணங்களை உடனே வெளியிட வேண்டும் இல்லையெனில் மன்னிப்பு கேட்க வேண்டுமெனவும் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

4000 மெகாவாட் மின்சாரம் பெற ஒப்பந்தம் போடப்பட்டபோதிலும் தனியாரிடம் இருந்து 900 மெகாவாட் மட்டுமே கிடைக்கிறது பேட்டியளித்தார். மொத்த மின் தேவையில் 1.04% மட்டுமே சந்தையில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது எனவும் கூறினார். 4 மடங்கு அதிக விலைக்கு மின்சாரம் வாங்க முயற்சி என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டிற்கு அமைச்சர் பதில் அளித்தார்.

Related Stories: