கிருஷ்ணகிரி பஸ் ஸ்டாண்டில் ₹5.60 லட்சம் கஞ்சா பறிமுதல்-போலீசார் விசாரணை

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி ஸ்டாண்டில், கேட்பாரற்று கிடந்த 3 டிராவல் பேக்குகளில் ₹5.60 லட்சம் மதிப்பிலான கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி டவுன் போலீசாருக்கு கிடைந்த ரகசிய தகவலின் பேரில், எஸ்ஐ சிவசந்தர் மற்றும் போலீசார் நேற்று முன்தினம், புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு கேட்பாரற்று 3 பெரிய டிராவல் பேக் இருந்தது. அந்த 3 பைகளை போலீசார் கைப்பற்றி, அது யாருடையது என விசாரணை நடத்தினர்.

ஆனால் பஸ் ஸ்டாண்டில் இருந்த எவரும், அந்த பைகளுக்கு உரிமம் கொண்டாடவில்லை. இதையடுத்து அந்த பைகளை போலீசார் திறந்து பார்த்த போது, அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது. அந்த பையில் ஒரு செல்போனும் இருந்தது. இதையடுத்து, ₹5 லட்சத்து 60ஆயிரம் மதிப்பிலான 56 கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அந்த பையில் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போனை கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த கஞ்சா பொட்டலங்கள் ஆந்திரா, கர்நாடகா ஆகிய பகுதிகளில் இருந்து கடத்தி வரப்பட்டதா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories:

More
>