பரபரப்பான தமிழக அரசியல் சூழலுக்கிடையே ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு..!!

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து பேசினார். முன்னாள் அமைச்சர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை நடத்தி வரும் நிலையில் இந்த சந்திப்பானது நிகழ்கிறது. இந்த சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர்களான ஜெயக்குமார், சி.வி.சண்முகம், தங்கமணி, வேலுமணி, கடம்பூர் ராஜூ, வைத்தியலிங்கம், கே.பி.முனுசாமி உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக எடப்பாடி பழனிசாமி ஆளுநரை தனியாக சந்தித்து பேசுகிறார். தொடர்ச்சியாக கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுகவினர் செய்த நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே இருக்கக்கூடிய ஆதாரங்கள் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்படுவதாக கூறப்பட்டாலும் இது பழிவாங்கும் நடவடிக்கை என அதிமுகவினர் தெரிவித்து வருகின்றனர். மேலும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை தொடர்ச்சியாக நிலவுவதாக அதிமுக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி அறிக்கை வெளிட்டு வருகிறது.

இந்நிலையில், இதுகுறித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை மனு ஒன்றை அளிக்கின்றார். தொடர்ந்து, தமிழ்நாட்டில் நிலவும் முக்கிய நிகழ்வுகள் தொடர்பாகவும் அவர் கோரிக்கை மனுவை வழங்குகிறார். சந்திப்பின் முடிவில் ஆளுநரிடம் எவ்விதமான கோரிக்கை முன்வைக்கப்பட்டது. தமிழகத்தில் தற்போது நிலவக்கூடிய அரசியல் நிலைமைகள் என்ன என்பது தொடர்பாக ஒரு விரிவான விவாதங்கள் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: