ஊழலை ஒழிக்க தொடர்ந்து பாடுபடுகிறேன் என பிரதமர் மோடி பேச்சு : குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தையும் திறந்து வைத்தார்

புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம், குஷிநகரில் புத்தர் மகாபரிநிர்வான் அடைந்த இடத்தை பார்வையிடுவதற்காக வரும் வெளிநாட்டு பயணிகளின் வசதிக்காக சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. குஷிநகர் விமான நிலையம் இந்திய விமான நிலைய ஆணையத்தால் 260 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டதாகும். இந்த விமான நிலையத்தின் புதிய சர்வதேச முனையக் கட்டடம் 3,600 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் 29-வது சர்வதேச விமான நிலையமாகும்.இந்த விமான நிலையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து, முதல் விமானமாக கொழும்புவில் இருந்து இலங்கை பிரதிநிதிகளை கொண்ட குழுவினர் வருகை தரும் விமானம் தரையிறங்குகிறது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, மக்களின் பல ஆண்டு எதிர்பார்ப்புகள் நிறைவேறி உள்ளதாக கூறினார். வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் வளர்ச்சிக்கு இந்த விமான நிலையம் மேலும் உத்வேகம் அளிக்கும் என்று அவர் தெரிவித்தார்.  இந்த விமான நிலையத்தை புத்த மதத்தவர்களுக்காக அர்பணிப்பதாக அவர் தெரிவித்தார். இதன் மூலம் சுற்றுலாதுறை மேலும் மேம்படும் என்றும் அந்த மாநிலத்தின் பிற்படுத்தப்பட்ட பகுதியான பூர்வாஞ்சல் பகுதியின் வளர்ச்சிக்கு இந்த புதிய விமான நிலையம் முக்கிய பங்காற்றும் என்றும் பிரதமர் மோடி கூறினார். சுற்றுலா துறையின் மேம்பாட்டால் உள்ளூர் பொருட்கள் விற்பனையும் மேம்படுவதற்காக சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் அம்மாநில ஆளுநர் யோகி ஆதித்யநாத், ஆனந்திபென் படேல், விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா ஆகியோர் பங்கேற்றனர். 12 நாடுகளின் தூதர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.  

முன்னதாக குஜராத்தில் மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் மற்றும் சிபிஐ அதிகாரிகளின் கூட்டு மாநாட்டை காணொலியில் பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அப்போது பேசிய அவர், கடந்த ஆறேழு ஆண்டுகளில் அரசு எடுத்துள்ள முயற்சிகளால், நாட்டில் பெருகி வரும் ஊழலை ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.எவ்வளவு பெரிய ஆட்களாக இருந்தாலும் ஊழல் செய்தால், அதை நாடு பொறுத்துக்கொள்ளாது என்பதுடன், ஊழல் செய்தவர்கள் மீது எந்த கருணையும் காட்டப்பட மாட்டாது என்றார்.

Related Stories: