அறைக்கதவை உட்புறமாக தாழிட்டு ஒன்றரை வயது குழந்தை சிக்கியது

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் வீட்டின் அறையின் கதவை உட்புறமாக தாழிட்டு சிக்கித் தவித்த ஒன்றரை வயது குழந்தையை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். திண்டுக்கல், விவேகானந்தர் நகர் பகுதியை  சேர்ந்தவர் முகமது அசாருதின். இவரது ஒன்றரை வயது மகன் ஆசாத். நேற்று மதியம்  பெற்றோர் வீட்டின் வெளியே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது குழந்தை  ஆசாத், வீட்டின் ஒரு அறைக்குள் கதவை உட்புறமாக பூட்டி கொண்டது.

ஆசாத்தின் அலறல் சத்தம் கேட்டு பெற்றோர் கதவை உடைக்க முயன்றனர். ஆனால் முடியாததால்  திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். வீரர்கள் விரைந்து வந்து ஹைட்ராலிக் ஓபனர் மூலம் கதவை  திறந்து குழந்தை ஆசாத்தை பத்திரமாக மீட்டனர். குழந்தையை பத்திரமாக  மீட்ட தீயணைப்பு துறையினருக்கு பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி  தெரிவித்தனர்.

Related Stories:

More
>