சையது முஷ்டாக் அலி கோப்பைக்கான தமிழ்நாடு அணி கேப்டனாக விஜய்சங்கர் தேர்வு.: . தினேஷ் கார்த்திக் காயம் காரணமாக விலகல்

சென்னை: சையது முஷ்டாக் அலி கோப்பைக்கான தமிழ்நாடு அணி கேப்டனாக விஜய்சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். தினேஷ் கார்த்திக் காயம் காரணமாக விலகியுள்ளதால், துணை கேப்டனாக இருந்த விஜய்சங்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சையது முஷ்டாக் அலி கோப்பைக்கான டி- 20 தொடரில் தமிழ்நாட்டின் சார்பாக விளையாடும் அணியை கடந்த 5-ம் தேதி தமிழ்நாடு கிரிக்கெட் சங்க மாநில தேர்வுக் குழு அறிவித்தது. அந்த அணியில் கேப்டனாக தினேஷ் கார்த்திக், துணை கேப்டனாக விஜய் சங்கர் அறிவிக்கப்பட்டனர்.

ஆனால், நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் தினேஷ் கார்த்திக்கு காயம் ஏற்பட்ட காரணத்தால் தற்போது சையது முஷ்டாக் அலி கோப்பைக்கான டி- 20 தொடரில் இருந்து அவர் விலகியுள்ளார். அதாவது, சென்னை அணிக்கு எதிரான இறுதிப் போட்டியின் போது கொல்கத்தா அணி சார்பில் விளையாடிய தினேஷ் கார்த்திக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது.  

தினேஷ் கார்த்திக்கு முழங்காலில் ஏற்பட்ட காயம் தற்போது வரை குணமடையாததால் இந்த தொடரில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்தார். இதனால், துணை கேப்டனாக இருந்த விஜய் சங்கர் தற்போது கேப்டனாக தமிழ்நாடு அணி சார்பாக விளையாடுவார் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், தினேஷ் கார்த்திக் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகியதால் அவருக்கு பதிலாக ஆதித்யா கணேஷ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Related Stories:

More
>