சென்னையில் ஒன்றரை ஆண்டுகளுக்‍குப்பின் விமான சேவை அதிகரிப்பு!: பயணம் செய்வோர் எண்ணிக்கையும் கணிசமாக உயர்வு..!!

சென்னை: சென்னையில் கொரோனா பரவல் காரணமாக விமான போக்குவரத்து தடைப்பட்டிருந்த நிலையில், ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கை 224 ஆக உயர்ந்திருக்கிறது. பயணம் செய்வோர் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்தது. நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை பரவல் குறைந்து வருவதால் உள்நாட்டு விமான நிலையங்களில் 100 சதவீதம் பயணிகளுடன் விமானங்களை இயக்க ஒன்றிய சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் அனுமதி அளித்திருக்கிறது. அதற்கேற்ப சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் விமானங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. கொரோனா 2வது அலை பெருமளவு குறைந்து வருவதால் பொதுமக்கள் கூடுதல் உற்சாகத்துடன் தங்களுடைய பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 19 மாதங்களுக்கு பின் 113 விமானங்கள் சென்னையில் இருந்து டெல்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு புறப்பட்டதுடன் 111 விமானங்கள் வருகை தந்துள்ளன. இதன் காரணமாக பயணிகள் எண்ணிக்கையும் உயர்ந்திருக்கிறது. நீண்ட மாதங்களுக்கு பின் 30 ஆயிரம் பயணிகள் விமானங்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர். டெல்லி, மும்பை, கொல்கத்தா, கவுஹாத்தி, பெங்களூரு மற்றும் கோவை விமானங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாகவே உள்ளது. அதேநேரம் உள்நாட்டு விமான கட்டணங்களின் உயா்வு பயணிகளை அதிா்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

Related Stories:

More
>