முல்லை பெரியாறு அணை வலுவாக இருப்பதால் இனி பாதுகாப்பு பற்றி பேச எதுவும் இல்லை!: சுப்ரீம் கோர்ட்டில் ஒன்றிய அரசு அறிக்கை தாக்கல்..!!

டெல்லி: முல்லை பெரியாறு அணை வலுவாக இருப்பதால் இனி அணையின் பாதுகாப்பு பற்றி பேச எதுவும் இல்லை என உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அணையின் நீர்மட்டத்தை குறைப்பதோடு அணையின் பாதுகாப்பு தன்மையை ஆய்வு செய்ய சர்வேதேச நிபுணர் குழு அமைக்க வேண்டும் என கேரளாவின் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த ரசூல் ராய் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் ஒன்றிய அரசு சார்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அணையின் மதகுகள், கதவுகள், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள பழுதுகள் அனைத்தும் சரிசெய்யப்பட்டு விட்டதாக அதில் கூறப்பட்டுள்ளது. இன்னும் எஞ்சிய சில பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவு பெறும் என்று கூறியுள்ள ஒன்றிய அரசு, முல்லை பெரியாறு அணை வலுவாக இருப்பதால் இனி அணையின் பாதுகாப்பு பற்றி பேச எதுவும் இல்லை என தெரிவித்துள்ளது. இந்த வழக்கு வருகின்ற 25ம் தேதி உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More
>