இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் காம்போசிட் காஸ் சிலிண்டர் அறிமுகம்

சென்னை: இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில், புதிய இந்தியன் ஆயில் காம்போசிட் சிலிண்டர் அறிமுகம் நேற்று செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்து கொண்டார். புதிய நவீன எடை குறைந்த காம்போசிட் சிலிண்டர் வெளியிடும் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவர் எஸ்.எம். வைத்யா காம்போசிட் சிலிண்டரை வெளியிட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் இந்தியன் ஆயில் நிர்வாக இயக்குனர் மற்றும் தமிழ்நாடு புதுவை  மாநில தலைவர் ஜெயதேவன் மற்றும் தென் பிராந்திய நிர்வாக  இயக்குனர் சைலேந்திரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவர் எஸ்.எம். வைத்யா பேசுகையில்: புதுவகை காம்போசிட் சிலிண்டர்கள் 10 கிலோ மற்றும் 5 கிலோ எடை பிரிவுகளில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த சிலிண்டரின் உட்புறம் எச்டிபிஇ லைனிங் மற்றும் பாலிமர் சுற்றப்பட்ட பைபர்க்ளாஸ் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதால் இதன் பாதுகாப்பு பன்மடங்கு கூடுகிறது. மேலும் இந்த வகை சிலிண்டர்கள் சராசரி சிலிண்டர்களின்  பாதி எடையை மட்டுமே கொண்டுள்ளதால் இதனை கையாள்வதும் மிகவும் சுலபமாக இருக்கும்.

மேலும் எரிவாயுவின் இருப்பை எளிதில் தெரிந்துக் கொள்ளும் விதத்தில் இந்த சிலிண்டரின் ஒரு பகுதி  வெளியே இருந்தே உள்ளுக்குள் பார்க்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் கூடுதல் விலையை மட்டும் செலுத்தினால் போதுமானது. பழைய சிலிண்டர்களை மாற்றிக் கொள்ள விரும்பாதோர் புதிய 10 கிலோ  காம்போசிட் சிலிண்டர்களை ரூ. 3,350 செக்யூரிட்டி டெபாசிட் -ஆக செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.  இவை வீட்டிற்கே வந்து டெலிவரி செய்யப்படும்.

Related Stories:

More
>