ஆந்திராவுக்கு கடத்த முயற்சி 50 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்: வாலிபர் கைது

திருத்தணி: திருத்தணி பகுதியில் இருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்திய வாலிபரை கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த ராமஞ்சேரி கிராமத்தில் இருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக மாவட்ட போலீஸ் எஸ்பி.வருண்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரின் உத்தரவின்படி, சிறப்பு படை உதவி ஆய்வாளர் குமார் தலைமையில் போலீசார் நேற்று மாலை ராமஞ்சேரி பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அவ்வழியாக வந்த வாகனங்களை மறித்து சோதனை நடத்தியபோது ஒரு மினி லாரியில் 50 மூட்டை ரேஷன் அரிசி  இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து மினி லாரியுடன் ரேஷன் அரிசி மூட்டைகளையும் அவற்றை கடத்திவந்ததாக ஆந்திர மாநிலம் சத்தியவேடு பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் சதீஷ் (27) கைது செய்தனர். பின்னர் அவரை உணவு தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் இருந்து ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினி லாரியை பறிமுதல் செய்தனர். ‘மாவட்டத்தில் தொடர்ந்து கண்காணித்து ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு, கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Related Stories: