புரட்சி தாய் என பெயர் வைத்துக்கொள்ளும் அளவிற்கு என்ன புரச்சி செய்தார்?.. சசிகலா குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சரமாரி விமர்சனம்

சென்னை: கல்வெட்டில் பெயர் போட்டுக்கொண்டால் அதிமுக பொதுச்செயலாளர் ஆகிவிட முடியுமா? என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக பொன்விழாவையொட்டி சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதிமுக கொடியினை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினர். அதிமுகவின் பொன்விழா ஆண்டு சிறப்பு மலரும் வெளியிடப்பட்டது. பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர்; கல்வெட்டில் பெயர் போட்டுக்கொண்டால் அதிமுக பொதுச்செயலாளர் ஆகிவிட முடியுமா?. அதிமுக பொன்விழா எழுச்சியுடன் நடைபெறுவது சிசிகலாவிற்கு பிடிக்கவில்லை. இத்தனை நாட்களாக வெளியே வராமல் பொன்விழா நடக்கும் போது வெளியே வருவது ஏன்?. புரட்சித்தாய் என பெயர் வைத்துக்கொள்ளும் அளவிற்கு சசிகலா என்ன புரச்சி செய்தார்?. பொதுச்செயலாளர் என்ற பொறுப்பை பயன்படுத்த சசிகலாவுக்கு எந்த உரிமையும் இல்லை. சசிகலாவை அதிமுக தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள் என கூறினார்.

Related Stories: