லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்கு கைத்தறி உதவி இயக்குநரிடம் ரூ.1.83 லட்சம் பறிமுதல்

கோவை: கோவை சாயிபாபா காலனி பாரதி பார்க் ரோட்டில் கைத்தறி துறை உதவி இயக்குநர் அலுவலகம் உள்ளது. இதில் உதவி இயக்குநராக சூர்யா என்பவர் பணியாற்றி வருகிறார். இவரது அலுவலகத்தில் ஆயுத பூஜை நாளில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் திடீர் ரெய்டு நடத்தினர். சூர்யாவின் டேபிள் டிராயரில் ரூ.1.03 லட்சமும், கூட்டுறவு சங்க அலுவலர் லியோ என்பவரிடம் 80 ஆயிரம் ரூபாயும் இருந்தது. இவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அவர்கள் இவ்வளவு தொகையை யாரிடம் லஞ்சமாக வாங்கினார்கள் என தெரியவில்லை. போலீசார் 2 நாளுக்கு பின் நேற்று வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் சூர்யா மீது மட்டுமே வழக்குப்பதிவானது. லியோ மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

More
>