மின்வாரிய ஊழியர்களுக்கு 25% போனஸ்: தொழிற்சங்கத்தினர் கோரிக்கை

சென்னை: மின்வாரியத்தில் பணியாற்றுவோருக்கு போனஸ் வழங்கிட வேண்டும் என தொழிற்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தொழிற்சங்கத்தினர், மின்வாரிய தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றுபவர்களுக்கு போனஸ் வழங்கிட தொழிற்சங்கங்களோடு பேச்சுவார்த்தை தொடங்கிட வேண்டும். நிரந்தர பணியாளர்களுக்கு 25% போனஸ் வழங்கிட வேண்டும். வகுப்பு 1 மற்றும் 2 அலுவலர்கள், பொறியாளர்களுக்கு தீபாவளி பரிசாக ரூ.5,000 வழங்கிட வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஒருமாத ஊதியம் போனஸாக வழங்கிட வேண்டும்’ எனக்கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More
>