நடிகை காஜல் அகர்வாலுக்கு டிவிட்டரில் 5 மில்லியன் பாலோயர்கள்

சென்னை: தென்னிந்திய மொழிகள் மட்டுமின்றி பாலிவுட்டிலும் பல படங்களில் நடித்தவர், காஜல் அகர்வால். கமல்ஹாசனுடன் அவர் நடிக்கும் ‘இந்தியன் 2’ என்ற படம் பல்வேறு பிரச்னைகளால் படப்பிடிப்பு நடக்கவில்லை. இந்நிலையில், கடந்த ஆண்டு கவுதம் கிட்ச்லு என்ற மும்பை தொழிலதிபரை காதல் திருமணம் செய்து தனி வீட்டில் குடியேறிய காஜல் அகர்வால், தற்போது கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், தெலுங்கு மற்றும் தமிழில் ஒப்பந்தமான சில படங்களில் இருந்து அவர் விலகிவிட்டார்.

சமூக வலைத்தளங்களில் தினந்தோறும் தனது போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டு சுறுசுறுப்பாக இயங்கி வரும் அவருக்கு டிவிட்டரில் 5 மில்லியன் பாலோயர்கள், அதாவது, 50 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். இதற்காக அவர் தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் காஜல் அகர்வாலை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 19.9 மில்லியன் ஆகும்.

Related Stories:

More
>