ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முறையாக நடக்க ஆணையம் நடவடிக்கை எடுக்கும்!: ஐகோர்ட் நீதிபதிகள் நம்பிக்கை..!!

சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முறையாக நடக்க ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்று சென்னை உயர்நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. திரிசூலம் பஞ்சாயத்து பதவி, வார்டு உறுப்பினர் பதவி, யூனியன் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட சரஸ்வதி, சத்தியநாராயணன், முத்துக்கனி ஆகிய 3 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினை தொடர்ந்திருந்தனர். வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடக்க வாய்ப்பிருப்பதால், வாக்கு பதிவு முழுவதையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று அவசர வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் அப்துல் குத்தூர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அச்சமயம், வாக்கு எண்ணிக்கை ஏற்கனவே தொடங்கி திட்டமிட்டபடி நடைபெற்று கொண்டிருக்கிறது. இதுவரை எந்த குற்றச்சாட்டும் இல்லை. முறைகேடு நடைபெற வாய்ப்பு இல்லை என்று தமிழக அரசு தரப்பிலும், நீதிபதிகள் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடைபெற்றால் மாநில தேர்தல் ஆணையம் முறைப்படி நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாகவும், மனு குறித்து மாநில தேர்தல் ஆணையம் 2 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதேசமயம் வாக்கு எண்ணிக்கையை வீடியோ பதிவு செய்யகோரிய வழக்குகளுக்கும் மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

Related Stories: