பண்டிகை காலத்தில் ஒளிர வேண்டிய மக்களின் வாழ்க்கை கடுமையான விலையேற்றத்தால் மங்கிவிட்டது!: ஒன்றிய அரசுக்கு ராகுல் காந்தி கண்டனம்..!!

டெல்லி: பண்டிகை காலத்தில் ஒளிர வேண்டிய மக்களின் வாழ்க்கை கடுமையான விலையேற்றத்தின் காரணமாக மங்கிவிட்டதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். தினம் தினம் பெட்ரோல்,டீசல்,சமையல் காஸ் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் சாதாரண, ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பணம் தேவைப்படும்போதெல்லாம் ஒன்றிய அரசு விலையை உயர்த்தி, லட்சக்கணக்கான கோடி ரூபாயை மக்களிடமிருந்து பறித்துக் கொண்டே இருக்கிறது. தொடர்ந்து விலைவாசி உயர்ந்து வரும் நிலையில், வாங்கும் சக்தியோ, விலை உயர்வை தாங்கும் சக்தியோ மக்களிடம் இல்லை.

கோடான கோடி இளைஞர்கள் வேலையின்றித் தவித்து வரும் நிலையில், தொடர்ந்து சுமையை ஏற்றி வருவது மக்களுக்கு விரோதமாக ஒன்றிய அரசு செயல்படுவதை  காட்டுகிறது. எனவே, விலைவாசி உயர்வை ஒன்றிய அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், பண்டிகை காலத்தில் ஒளிர வேண்டிய மக்களின் வாழ்க்கை கடுமையான விலையேற்றத்தின் காரணமாக மங்கிவிட்டதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து, காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் விலைவாசி ஏற்றத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 11 நாட்களில் 2 ரூபாய் 35 காசுக்கும், டீசல் விலை 3 ரூபாய்க்கும் உயர்த்தப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் உணவு பொருட்களின் விலையேற்றத்தை சுட்டிக்காட்டியுள்ள ராகுல்காந்தி, இதற்காக நன்றி மோடி ஜி எனவும் சாடியுள்ளார்.

Related Stories: