உ.பி. தொடர்ந்து அரியானாவில் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் விவசாயிகள் மீது பாஜக எம்.பி. கார் மோதல்... பாஜகவினரின் செயல்களை கண்டுக்கொள்ளாத மோடி அரசு

சண்டிகர்: அரியானாவில் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் விவசாயிகள் மீது பாஜக எம்.பி. கார் மோதியதில் விவசாயி ஒருவர் பலத்த காயமைடைந்துள்ளார். அம்பாலா மாவட்டம் நாராயண்கர் என்ற இடத்தில திரண்டிருந்த விவசாயிகள் மீது பாஜக எம்.பி. நயாப் சைனி கார் மோதியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அம்பாலா தொகுதி பாஜக எம்.பி நயாப் சைனி கார் மோதியதில் பலத்த காயடைந்த விவசாயி மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுபோல, கடந்த சில நாட்களுக்கு முன்னதாக உ.பி மாநிலம் லக்கிம்பூர் பகுதியில் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா அரசு விழாவில் பங்கேற்பதற்காக சென்றுள்ளார். அங்கு வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர்களின் வருகையை கண்டித்து, விவசாயிகள் கறுப்புக்கொடி ஏந்தி வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

அப்போது ஒரு கார் திடீரென விவசாயிகள் கூட்டத்திற்குள் நுழைந்தது விவசாயிகளை இடித்து தள்ளியது. இந்த விபத்தில் 4 விவசாயிகள் உள்பட மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விவகாரம் இந்திய அளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினர் தங்களது எதிர்ப்பு மற்றும் கண்டனங்களை தெரிவித்தும், போராட்டம் நடத்தியும் வருகின்றனர். இந்தநிலையில், உ.பி மாநிலம் லக்கிம்பூர் பகுதியில் ஏற்படுத்தப்பட்ட விபத்தின் தாக்கம் குறைவதற்கும் தற்போது அரியானாவில் விவசாயிகள் மீது பாஜக எம்.பி. கார் மோதியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற சம்பவங்களை மோடி அரசு கண்டுக்கொள்ளாமல் ஊக்குவிப்பது போல உள்ளதால் விவசாயிகள் மற்றும் நாட்டு மக்கள் தொந்தளிப்பில் உள்ளனர்.

Related Stories: