சோதனையின் போது துப்பாக்கி குண்டு வெடித்து 2 ஊழியர் படுகாயம்: திருச்சி ஓஎப்டியில் பரபரப்பு

திருவெறும்பூர்: திருச்சி அருகே துப்பாக்கி தொழிற்சாலையில் சோதனையின்போது திடீரென துப்பாக்கி வெடித்ததில் 2 ஊழியர்கள் படுகாயமடைந்தனர். திருச்சி திருவெறும்பூர் அருகே துப்பாக்கி தொழிற்சாலை உள்ளது. இது இந்தியா லிமிடெட் அட்வான்ஸ்டு வெப்பன்ஸ் அண்ட் எக்ஸ் மெண்டல் இந்தியா லிமிடெட் (ஏடபிள்யூஇஐஎல்) என்ற பெயரில் கார்ப்பரேட் நிறுவனமாக சமீபத்தில் மாற்றப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் துப்பாக்கிகள் ராணுவம், காவல்துறை, சிறப்பு படை உள்ளிட்ட பல்வேறு அரசு படை பிரிவினருக்கு பயன்படுத்துகிறது. இங்கு தயாரிக்கப்படும் துப்பாக்கிகள் அதன் செயல்பாடுகள் குறித்து அங்கேயே சோதனை செய்வது வழக்கம்.

இந்நிலையில் நேற்று துப்பாக்கி தொழிற்சாலையில் (ஏஎம்ஆர்)ஆண்டி மெட்டீரியல் ரைபிள் எனும் ரக துப்பாக்கியை ஊழியர்கள் ஓஎப்டி வளாக குடியிருப்பை சேர்ந்த பிரகாஷ் (42), திருவெறும்பூர் வடக்கு காட்டூரை சேர்ந்த அழகேசன்(57) ஆகிய இருவரும் பரிசோதிக்கும்போது சேம்பரில் இருந்த குண்டு திடீரென வெடித்து சிதறி உள்ளது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து இருவரையும் சக ஊழியர்கள் காப்பாற்றி திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து நவல்பட்டு போலீசார் விசாரிக் கின்றனர்.

Related Stories: