தரங்கம்பாடி பகுதியில் சம்பா சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்

தரங்கம்பாடி : தரங்கம்பாடி பகுதியில் சம்பா மற்றும் தாளடி சாகுபடியில் விவசாயிகள் கவனம் செலுத்தி வருகின்றனர். பாய் நாற்றாங்கால் விடுதல், நிலங்களை உழுதல், அன்டை வெட்டுதல், உள்ளிட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பா சாகுபடிக்கு சிஆர்1009, சிஆர்சப், சொர்னாசப், உள்ளிட்ட 150 நாள் வயதுடைய நெல்லை பயன்படுத்துகின்றனர். இதுபோல் தாளடி சாகுபடிக்கு ஆடுதுறை 38, ஆடுதுறை 39, ஆடுதுறை46, கோ43, கோ50, ஐஆர்20, மற்றும் ஆந்திரா பொன்னி விதை நெல்களை பயன்படுத்துகின்றனர். இவற்றின் வயது 135 நாளாகும்.

சம்பா மற்றும் தாளடி சாகுபடிக்கு ஆற்று பாசனத்தை பயன்படுத்தி வருகின்றனர். காவேரி, வீரசோழன், மஞ்சலாறு, மகிமலையாறு, கடலிஆறு, நண்டலாறு, அய்யாவையனாறு, உள்ளிட அறுகள் மூலம் 13 ஆயிரத்து 757 ஹக்டோ; நிலத்தில் சம்பா தாளடி சாகுபடிகள் நடந்து வருகின்றன. நேற்று முன்தினம் இரவில் இருந்து தரங்கம்பாடி பகுதியில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இது விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளித்து வருகிறது.

Related Stories: