நீலகிரியில் 4 பேரை அடித்து கொன்ற ஆட்கொல்லி புலியை பிடிக்க அறிவியல் ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது : தமிழக வனத்துறை!!

கூடலூர்: நீலகிரி மாவட்டம் மசினகுடி தேவன் எஸ்டேட் பகுதியில் 3 நபர்கள் மற்றும் 30க்கும் மேற்பட்ட கால்நடைகளை புலி அடித்துக்கொன்றது. புலியை பிடிக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன்படி கூண்டு வைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த வரம் மங்கள பசுவன் என்ற முதியவரை அடித்துக்கொன்று உடலில் சில பாகங்களை தின்றது. இதனையடுத்து புலியை சுட்டுக்கொல்ல உத்தரவு பிறபிக்கப்பட்டது. முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் வெங்கடேஷ் மற்றும் 2 இணை இயக்குநர்கள் தலைமையில் 10 பேர் கொண்ட  குழுவினர் புலியை சுட்டுக் கொல்லும் பணியை துவங்கினர்.4 பேரை அடித்து கொன்ற புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் கடந்த 11 நாட்களாக வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.ஆனால் ஆட்கொல்லி புலி வனத்துறையினரின் கண்ணில் சிக்காமல் புதர்களுக்குள் பதுங்கி, பதுங்கி வனத்துறையினரிடம் இருந்து தப்பி வருகிறது. இதனால் புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.

இந்த நிலையில், சிங்காரா வனப்பகுதியில் பதுங்கி உள்ள புலியை பிடிக்க மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து தமிழ்நாடு தலைமை வன உயிரின பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ் விளக்கம் அளித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆட்கொல்லி புலியை பிடிக்க தினந்தோறும் வியூகங்களை மாற்றி செயல்பட்டு வருகிறோம்.டி23  புலிக்கு வயது ஆகிவிட்டதால் காட்டில் உள்ள விலங்குகளை அதனால் வேட்டையாட முடியவில்லை.புலிக்கு தொல்லை கொடுக்காமல் அதனை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.புலியை பிடிக்க அறிவியல் ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.புலியை தனிமைப்படுத்தி பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.பல்வேறு குழு அமைத்து புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறோம். வனப்பகுதியில் பரண் அமைத்து புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறோம். ,என்றார்.

Related Stories: