சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ரஜினிகாந்த் நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தின் ஒரு பாடல் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டது. இந்நிலையில், இப்பாடல் யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ரஜினிகாந்த் நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தை சன் டி.வி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் பிரமாண்டமாக தயாரிக்கிறார். சிறுத்தை சிவா இயக்க, வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். இமான் இசை அமைக்க, ரூபன் எடிட்டிங் செய்கிறார். நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி, ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், வேல.ராமமூர்த்தி உள்பட பலர் நடிக்கின்றனர். ‘எந்திரன்’, ‘பேட்ட’ ஆகிய படங்களுக்குப் பிறகு சன் பிக்சர்ஸ், ரஜினிகாந்த் இணைந்துள்ள 3வது படம் ‘அண்ணாத்த’ என்பதால், இப்படத்துக்கு ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.