காஞ்சிபுரத்தில் பிரபல ஜவுளிக்கடை உள்பட 8 இடங்களில் ஐடி அதிரடி ரெய்டு

சென்னை: காஞ்சிபுரம் காந்தி சாலையில் பிரபல ஜவுளிக்கடை, தனியார் நிதி நிறுவனம் உள்பட 8 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று காலை சோதனையில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் காந்தி சாலை, திருக்கச்சி நம்பி தெருவில் பிரபல ஜவுளிக்கடைகள் அதிகளவில் உள்ளன. அங்குள்ள செங்கல்வராயன் சில்க் அவுஸ், காந்தி சாலையில் உள்ள பிரபல ஜவுளிக்கடை, ரங்கசாமி குளம் பகுதியில் உள்ள நிதி நிறுவனம், உரிமையாளர்களின் வீடுகள் உள்பட 8 இடங்களில் நேற்று 54 வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.

காந்தி சாலையில் உள்ள ஜவுளிக் கடைக்கு அதிகாரிகள் சென்றபோது, ஜவுளி எடுக்க வந்த பொதுமக்கள், ஜவுளிக்கடை ஊழியர்கள் 100க்கும் மேற்பட்டோர் வந்ததால், வருமான வரித்துறை அதிகாரிகள் அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு, ஷட்டரை பூட்டி வைத்து, சோதனை நடத்தினர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் மற்றும் கணக்கில் வராத ரொக்கம் ஆகியவை அதிகாரிகள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த வரி ஏய்ப்பு புகாரின் பேரில் இந்த சோதனை நடந்ததாக தெரிகிறது. காஞ்சிபுரத்தில் ஒரே நேரத்தில் 3 நிறுவனங்களில் நடந்த அதிரடி சோதனை காஞ்சிபுரம் பகுதியில் உள்ள பல்வேறு பிரபல நிறுவனங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: