பாலக்காடு மாவட்டத்தில் கல்லூரிகள் திறந்தன

பாலக்காடு : பாலக்காடு மாவட்டத்தில் நேற்று முதல் கல்லூரிகள் திறந்து செயல்படத் தொடங்கின. கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் காரணமாக கடந்த மதங்களாக மூடப்பட்டிருந்த கல்லூரிகள் நேற்று மீண்டும் திறந்து செயல்பட்டது. இறுதியாண்டு இளங்நிலை, முதுநிலை மாணவ, மாணவ,மாணவிகளுக்கு வகுப்புகள் நடைபெற்றது. இளங்கலை, முதுகலை படிக்கின்ற மாணவர்களுக்கு மட்டுமே தற்போது வகுப்புகள் துவங்கியுள்ளது. காலை 9 மணிமுதல் மதியம் ஒரு மணி வரை மட்டுமே வகுப்புகள் நடைபெற்று வருகின்றது.

அனைத்து மாணவர்களையும் பெரிய வகுப்பு அறைகள், கலையரங்குகளில் சமூக இடைவெளிவிட்டு, சானிடைசர் உபயோகம் செய்து வகுப்பறைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இவற்றை என்சி.சி., நாட்டுநலப்பணி மாணவர்கள் கண்காணித்து அனுமதி வழங்கி வருகின்றனர். முன்னதாக பெரும்பாலான மாணவர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசிகள் செலுத்திய சான்றிதழ் அல்லது ஒரு டோஸ் போட்டுக்கொண்டு சான்றிதழ்கள் கட்டாயம் காண்பிக்க வேண்டும். இல்லையேல் நெகடீவ் சான்றிதழ் கட்டாயம் காட்ட வேண்டும் என அறிவிக்கப்பட்டது. நோய் அறிகுறிகள் இருப்பவர்களுக்கு அனுமதி கிடையாது. மேற்கண்ட விதிமுறைகள் கடைப்பிடித்து கல்லூரி விடுதிகளிலும் அனுமதி வழங்கி வருகின்றனர்.

Related Stories: