உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதை தடுப்பதாக கூறி தீக்குளித்த தமிழ்நாடு பறையர் பேரவை தலைவர் வெற்றிமாறன் மரணம்: போலீசார் விசாரணையை ெதாடங்கினர்

சென்னை: தென்காசி மாவட்டம் கோவில்பட்டி தாலுகா ஜமீன் தேவர்குளம் காலனி தெருவை சேர்ந்த வெற்றிமாறன்(48). இவர் தமிழ்நாடு பறையர் பேரவையின் தலைவராக இருந்தார். உள்ளாட்சி தேர்தலில், தென்காசி மாவட்டம் குருவிகுளம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட மனு தாக்கல் செய்திருந்தார்.

அதே பதவிக்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கமலா என்பவரின் கணவர் பாலகிருஷ்ணன் மற்றும் அவர் சமூகத்தை சார்ந்த நபர்கள் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி, வெற்றி மாறன் தாக்கல் செய்த வேட்புமனுவை நிராகரிக்க செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதை கேட்ட வெற்றிமாறனை, அவரது சாதி பெயரை கூறி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால், மனமுடைந்த நெடுமாறன் கடந்த மாதம் 27ம் தேதி முதல்வரை நேரில் சந்தித்து மனு அளிக்க வந்தார். அப்போது யாரும் எதிர்பார்க்காத நிலையில் அவர் கையில் கொண்டு வந்த டர்பனை உடலில் ஊற்றி தீவைத்து தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்த போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த வெற்றிமாறன் நேற்று மாலை உயிரிழந்தார். இதுகுறித்து தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: