பருவமழை காலத்தில் கால்நடைகளை பாதுகாக்க மாவட்டம்தோறும் 1,294 அவசர கால குழுக்கள் அமைப்பு: கால்நடை பராமரிப்புத்துறை தகவல்

சென்னை: தமிழக, கால்நடை பராமரிப்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கை: வெள்ளம் தொடர்பான நடவடிக்கைகளை முறையாக கண்காணிக்க தற்காலிக செயல்பாட்டு அறை மாவட்ட நிலையில் ஏற்படுத்தப்படுகிறது. பொதுமக்கள் எளிதாக அணுக 1800 425 5880 என்ற இலவச எண் ஒதுக்கப்பட்டுள்ளது. நடமாடும் கால்நடை அவசர சிகிச்சை ஊர்தியினை அழைப்பு மையத்தின் இலவச எண் 1962ல் தொடர்பு கொள்ளலாம்.  மாவட்ட அளவில் 1,294 அவசர கால நடவடிக்கை குழுக்கள் ஏற்படுத்தப்படுகிறது. 1740 கால்நடை மீட்பு மையங்கள், தங்குமிடங்கள் மழையால் பாதிக்கப்படக்கூடிய இடங்களில் நிறுவப்பட உள்ளது. 56 நடமாடும் கால்நடை மருத்துவப் பிரிவுகள் வெள்ளத்தின் போது கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படும்.விவசாயிகள் மற்றும் அரசு பண்ணைகளில் கிடைக்கும் உபரி தீவனம் பற்றாக்குறை உள்ள இடங்களுக்கு கொண்டு செல்லப்படும். கால்நடை நிறுவனங்களில் கட்டப்பட்ட 1215 தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது. மேலும், கால்நடைகள் மற்றும் கோழிகளின் இயல்பான ஆரோக்கியத்தை மீட்டெடுப்பதற்காக 1294 கால்நடை சுகாதார முகாம்கள் மேற்கொள்ளப்படும். அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி தெளித்து நோய்கள் பரவாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அனைத்து களப்பணியாளர்களும் கவனமுடன் பணிபுரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

Related Stories: