நாகசைதன்யா கொடுக்க முன்வந்த ஜீவனாம்சம் ரூ. 200 கோடி சமந்தா வாங்க மறுப்பு

சென்னை: தெலுங்கில் சில படங்களில் ஜோடி சேர்ந்து நடித்த தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவும், நடிகை சமந்தாவும் காதலித்தனர். பிறகு இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2017 அக்டோபர் 6ம் தேதி கோவாவில் திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில், திடீரென்று அவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து தங்கள் மண வாழ்க்கையை முறித்துக் கொள்வதாகவும், இனி இருவரும் தனித்தனியே வாழ்க்கையை தொடர இருப்பதாகவும் நேற்று முன்தினம் தங்கள் சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்தனர். இச்செய்தி அவர்களது ரசிகர்களிடையே வேதனையை ஏற்படுத்தியது. ஒட்டுமொத்த திரையுலகையும் பரபரப்புக்குள்ளாக்கியது.

இந்நிலையில், நாகசைதன்யா  குடும்பத்தில் இருந்து சமந்தாவுக்கு 200 கோடி ரூபாய் ஜீவனாம்சம் கொடுக்க முன்வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அத்தொகையை சமந்தா வேண்டாம் என்று சொல்லிவிட்டதாக தகவல் வெளியானது. இதுகுறித்து நேற்று சமந்தா தரப்பில் விசாரித்தபோது, ‘நாகசைதன்யா குடும்பத்தில் இருந்து 200 கோடி ரூபாய் ஜீவனாம்சம் கொடுக்க முன்வந்தார்களா என்று சரிவர தெரியவில்லை. ஆனால், பல கோடி ரூபாய் ஜீவனாம்சம் கொடுக்க முன்வந்தது மட்டும் உண்மை. அத்தொகையை சமந்தா வாங்க மறுத்துவிட்டார். தான் சுயமரியாதையுடன் வாழ விரும்புவதாக அவர் சொல்லிவிட்டார். ஐதராபாத் பகுதியில் நாகசைதன்யாவுடன் வசித்து வந்த வீட்டை தன் சொந்த பணத்தில் சமந்தா வாங்கியுள்ளார்’ என்று தெரிவிக்கப்பட்டது.

* நாகார்ஜூனா கருத்து

நாகசைதன்யா, சமந்தா மணமுறிவு குறித்து நாகசைதன்யாவின் தந்தையும், நடிகருமான நாகார்ஜூனா நேற்று முன்தினம் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘சமந்தாவுக்கும், நாகசைதன்யாவுக்கும் இடையே நடந்துள்ள பிரிவு மிகவும் துரதிருஷ்டவசமானது. இதை நான் கனத்த இதயத்துடன் தெரிவிக்கிறேன். கணவன், மனைவிக்கு இடையே நடக்கும் விஷயங்கள் தனிப்பட்டவை. சமந்தாவும், நாகசைதன்யாவும் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானவர்கள். எங்கள் வீட்டில் சமந்தா இருந்த நாட்களை, எங்களுடன் செலவழித்த நேரத்தை என்றென்றும் நினைவுகூறுவோம். சமந்தா எப்போதும் எங்களுக்கு நெருக்கமானவராகவே இருப்பார். இருவருக்கும் இறைவன் மனவலிமையை கொடுக்கட்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories: