பாம்பனில் கடல் சீற்றம் பால கட்டுமான இரும்பு மிதவை கரை ஒதுங்கியது

ராமேஸ்வரம்: பாம்பன் கடலில் பலத்த காற்று, கடல் சீற்றத்தினால் பாலம் கட்டுமான பணிக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரும்பு மிதவைகள் கரை ஒதுங்கின. ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் கட்டுமான பணிக்காக கான்கிரீட் கலவை இயந்திரம், ஜெனரேட்டர் உள்ளிட்ட இயந்திரங்கள் பொருத்தப்பட்ட இரும்பு மிதவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. நேற்று பாம்பன் வடக்கு கடல் பகுதியில் நிலவிய கடல் சீற்றம், பலத்த காற்றினால் இயந்திரம் பொருத்திய மிதவைகள் கடல் அலையில் இழுத்து வரப்பட்டு வடக்கு கடற்கரை பகுதியில் ஒதுங்கின. மேலும் கடல் சீற்றத்தினால் பலத்த அலைகள் ஏற்படுவதால் கரையோரத்தில் மணல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது பாம்பன் வடக்கு கடல் பகுதியில் கடல் சீற்றம் துவங்கியுள்ளது. ஒரு மாதத்திற்கும் மேலாக இந்த நிலை நீடிக்கும் என்பதால், வரும் நாட்களில் புதிய பாலம் கட்டுமான பணியில் பல்வேறு இடையூறுகள் ஏற்படும் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: