காமராஜர் வழியில் நின்று, ஏற்றத்தாழ்வு இல்லாத கல்வி எல்லாருக்கும் சாத்தியமாக உழைத்திடுவதற்கு இந்நாளில் உறுதி ஏற்றிடுவோம்: டிடிவி தினகரன் ட்வீட்

சென்னை: காமராஜரின் நினைவு நாளையொட்டி டிடிவி தினகரன் டிவிட்டரில் வாழ்த்து பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை செய்த கர்ம வீரர் கல்விக்கண் திறந்த காமராஜர் கடந்த அக்.02, 1975-ம் ஆண்டு காலமானார். காமராஜரின் நினைவு நாளையொட்டி அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில்; தலைமுறைகளை மாற்றும் சக்தி கல்விக்கு மட்டுமே உண்டு என்று உணர்ந்து ஏழை,எளிய வீட்டுப்  பிள்ளைகளுக்கும் கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜர் அவர்களின் நினைவு நாள் இன்று. அவர் வழியில் நின்று, ஏற்றத்தாழ்வு இல்லாத கல்வி எல்லாருக்கும் சாத்தியமாக உழைத்திடுவதற்கு இந்நாளில் உறுதி ஏற்றிடுவோம். இவ்வாறு குறிப்பிட்டுளார்.

மகாத்மா காந்தி பிறந்த நாள் குறித்து வெளியிடப்பட்ட மற்றோரு ட்வீட் பதிவில்; எந்நாளும்  இந்தியாவின் பெருமைமிக்க அடையாளமாக திகழும் தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாள் இன்று. அண்ணல் போதித்த அகிம்சை, மத ஒற்றுமை, கிராம மேம்பாடு உள்ளிட்ட உலகம் போற்றும் நற்சிந்தனைகளின் வழியில் நம்முடைய செயல்பாடுகளை அமைத்துக் கொள்வதே மகாத்மாவுக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: