கொரோனா தொற்றால் உயிரிழந்த குடும்பத்துக்கு அரசு வேலை வழங்கும் என அறிவித்து தாய் உள்ளம் கொண்ட முதல்வராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார்-அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேச்சு

செஞ்சி : ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளன. இதனை முன்னிட்டு செஞ்சி ஊராட்சி ஒன்றியம் சத்தியமங்கலம், சோ.குப்பம், வேலந்தாங்கல், சே.பேட்டை, பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் திமுக சார்பில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் அகிலா பார்த்திபன் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் உதயசூரியன் சின்னத்துக்கு தீவிர வாக்கு சேகரித்தார். சத்தியமங்கலம், சோ.குப்பம், வேலந்தாங்கல், சே.பேட்டை, பாக்கம், நல்லான்பிள்ளைபெற்றாள் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்த அமைச்சர் மஸ்தான், அப்பகுதியில் உள்ள பெண்களிடம் 4 மாதங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்த சாதனைகளை கூறி வாக்கு சேகரித்தார். தொடர்ந்து அவர் பேசுகையில்:

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற 4 மாத காலத்தில் தேர்தலில் சொன்ன 505 வாக்குறுதிகளில் 200க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி மக்களுக்கான அரசாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வரும் அரசாக தற்போதைய அரசு செயல்பட்டு வருகிறது. கொரோனா தொற்றால் உயிரிழந்த குடும்பத்துக்கு இன்று அரசு வேலை வழங்கும் என அறிவித்ததை வரவேற்று தாயுள்ளம் கொண்ட முதல்வராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார், இவ்வாறு பேசினார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செந்தமிழ்ச்செல்வன், ஒன்றிய செயலாளர்கள் செஞ்சி கிழக்கு விஜயகுமார், மேற்கு விஜயராகவன், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் மணிவண்ணன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் மொக்தியார் மஸ்தான் உள்ளிட்ட தோழமை கட்சியினர் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.

Related Stories: