திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் உண்டியலில் 20 கிலோ தங்கம், 26 கிலோ வெள்ளி பொருட்கள் காணிக்கை: அறநிலையத்துறை தகவல்

சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு, பக்தர்கள் காணிக்கையாக பணம் மட்டுமல்ல தங்கம், வெள்ளி காணிக்கையாக செலுத்துவது வழக்கம். அவ்வாறு வரும் நகைகளை உண்டியல் திறக்கப்படும் போது, சேகரித்து அவற்றை பாதுகாப்பாக வைக்கப்படுகிறது. இந்த நகைகள் முழுமையாக பயன்படுத்தாமல் அப்படியே வைக்கப்பட்டிருந்தது. இந்த நகைகளை 6 மாதங்களுக்கு ஒருமுறை மதிப்பீடு செய்யப்பட வேண்டும். ஆனால், நகை சரிபார்ப்பு அலுவலர்கள் பற்றாக்குறை காரணமாக இந்த நகைகள் எப்போதாவது ஒருமுறை மட்டுமே ஆய்வு செய்து மறுமதிப்பீடு செய்யப்படுகிறது.

இந்நிலையில், தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில் பயன்பாடற்ற நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றி வங்கிகளில் வைத்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயை ெகாண்டு கோயில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதை தொடர்ந்து கடந்த 15ம் தேதி தங்கம், வெள்ளி நகை பொருட்கள் மறுமதிப்பீடு செய்யப்பட்டன. இதுகுறித்து திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த 2016ல் வெள்ளி மறுமதிப்பீடு செய்யும் போது, உண்டியல் மற்றும் காணிக்கையாக வந்த 17 கிலோ 413 கிராம் வெள்ளியும், கடந்த 15ம் தேதி மறுமதிப்பீட்டிற்கு பிறகு 9 கிலோ 301 கிராம் என மொத்தம் 26 கிலோ 714 கிராம் பல மாற்று வெள்ளி இனங்கள் உள்ளது. கடந்த 2005 மறு மதிப்பீடு செய்யும் போது 8 கிலோ 217 கிராம் தங்கம், 2016ல் மதிப்பீடு செய்யும் 10 கிலோ வெள்ளி 096 கிராம் தங்கமும், கடந்த 15ம் தேதி வரை 2 கிலோ 487 கிராம் என மொத்தம் 20 கிலோ 800 கிராம் பல மாற்று பொன் இனங்கள் உள்ளன.

Related Stories: