சிலம்பம் தோன்றியது குறித்து அறிய ஆய்வுக்குழு: அமைச்சர் பேச்சு

சென்னை: சிலம்ப  விளையாட்டை மத்திய அரசின் ‘கேலோ  இந்தியா’ திட்டத்தில் இணைக்க தமிழக அரசு முழு முனைப்பு காட்டியதற்கு  சிலம்பம் வீரர்கள் சார்பில் பாராட்டு விழா நேற்றுமுன்தினம் மாலை ராயபுரம் தனியார் பள்ளியில் நடத்தப்பட்டது.   இதில் கலந்துகொண்ட விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் பேசும்போது, ‘‘தமிழர்களின்  வீர விளையாட்டான சிலம்பத்தை தமிழக அரசு உலகறிய செய்யும்.

தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்ப கலை தமிழ்நாட்டில் எங்கு தோன்றியது, எப்படி தோன்றியது என ஆய்வு செய்ய விரைவில் உயர் அதிகாரிகள் குழு அமைக்கப்படும்.    வடசென்னையில் சிலம்ப விளையாட்டிற்கு என பிரத்யேக ஸ்டேடியமும் அமைக்கப்படும் ’’ என்றார்.

Related Stories:

>