காந்தி ஜெயந்தியன்று பிரசாரம் தொடக்கம்; பாஜகவை வீழ்த்த 100 ‘வார் ரூம்’- உத்தரபிரதேசத்தில் பிரியங்கா முகாம்

லக்னோ: உத்தரபிரதேசத்தில் ஆளும் பாஜகவை வீழ்த்த எதிர்வரும் சட்டபேரவை தேர்தலுக்காக 100 வார் ரூம் அமைக்கும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அதற்காக, பிரியங்கா காந்தி லக்னோவில் முகாமிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, நேற்று உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு வந்தார். அடுத்தாண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான வேலையில் பிரியங்கா தீவிரம் காட்டி வருகிறார்.

இவரது வருகை குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூறுகையில், ‘மாநில காங்கிரஸ் கமிட்டி தலைமையகத்துக்கு வந்த பிரியங்கா காந்தி, கட்சியின் மூத்த தலைவர்களை சந்தித்தார். அடுத்தாண்டு நடைபெறும் பேரவை தேர்தலில் போட்டியிட உள்ள காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து ஆலோசனையை தொடங்கினார். இந்த மாதத்தில் மட்டும் இரண்டாவது முறையாக லக்னோ வந்துள்ளார். இங்கு ஐந்து நாட்கள் தங்கவுள்ளார். ஆளும் பாஜகவுக்கு எதிராக மக்கள் உள்ளதால், இந்த தேர்தலை நல்ல வாய்ப்பாக பயன்படுத்தி தேர்தல் களத்தில் பணியாற்ற அறிவுறுத்தினர்.

 நவராத்திரியின் முதல் நாளில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கவுள்ளார். ஆர்எஸ்எஸ் - பாஜகவின் பிரசாரத்தை முறியடிக்க 100 ‘வார் ரூம்’ அமைக்கப்பட்டு, காங்கிரஸ் சித்தாந்தங்களின் அடிப்படையில் தேர்தலை எதிர்கொள்வோம். பாஜகவிடம் இருந்து மக்களைக் காப்பாற்றும் வகையில் பிரசாரங்கள் வகுக்கப்படும். மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில் வரும் அக். 2ம் தேதியன்று லக்னோவில் இருந்து வாரணாசிக்கு பேரணியாக செய்ய திட்டமிட்டுள்ளார்’ என்று கூறினர்.

Related Stories: