நடிகர் சித்தார்த்துக்கு லண்டனில் ஆபரேஷன்

சென்னை: நடிகர் சித்தார்த் தற்போது ‘மகா சமுத்திரம்’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இதில் சர்வானந்த், அதிதி ராவ் ஹைதாரி, அனு இம்மானுவேல் நடிக்கின்றனர். அஜய் பூபதி இயக்குகிறார். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடந்தது. இதில் சித்தார்த் பங்கேற்கவில்லை. இதுகுறித்து பேசிய அஜய் பூபதி, ‘சித்தார்த்துக்கு லண்டனில் அறுவை சிகிச்சை நடைபெற இருப்பதால், இவ்விழாவில் அவரால் பங்கேற்க முடியவில்லை’ என்றார். பொதுவாக எல்லா விஷயங்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவிடும் சித்தார்த், லண்டனில் ஆபரேஷன் செய்துகொள்ள இருப்பது பற்றி தெரிவிக்காமல் இருப்பது, அவரது ரசிகர்களிடையே கவலையையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>