3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி விவசாயிகள் நாளை பாரத் பந்த்: எஸ்.டி.டி.யூ தொழிற்சங்கம் ஆதரவு

சென்னை: வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் நாளை நடத்தும் பாரத் பந்த் போராட்டத்திற்கு எஸ்.டி.டி.யூ தொழிற்சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. எஸ்.டி.டி.யூ. தொழிற்சங்கத்தின் மாநில தலைவர் ஆசாத் வெளியிட்ட அறிக்கை: சுதந்திர இந்தியாவில் மிக மோசமான விளைவுகளை உண்டாக்கும், ஒன்றிய அரசின் விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, செப்டம்பர் 27ம் தேதி (நாளை) ஒருங்கிணைந்த விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ள ‘பாரத் பந்த்’ முழு அடைப்பு போராட்டத்துக்கு எஸ்.டி.டி.யூ தொழிற்சங்கம் முழு ஆதரவு அளிக்கிறது.

அது தொடர்பான போராட்டங்களிலும் எஸ்.டி.டி.யூ. பங்கேற்கும். இந்த சட்டங்களுக்கு எதிராக 300 நாட்களுக்கும் மேலாக போராடிவரும் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை கூட பொருட்படுத்தாமல் அலட்சியம் செய்து வருகிறது ஒன்றிய அரசு. ஏகபோக கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வேளாண்துறையை தாரைவார்க்கும் ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களை கைவிட வலியுறுத்தி 27ம் தேதி நடைபெறும் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டும். ஆகவே, ஆணவத்தையும், முரட்டு பிடிவாதத்தையும் கைவிட்டு விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும். மேலும்  தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்.

Related Stories: