அரசின் நல திட்டங்கள் மக்களுக்கு சேரும் வகையில் ஆதார் எண்களை டிச.31க்குள் இணைக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு ஐடி துறை அறிவுறுத்தல்

சென்னை: தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பதுறை  வெளிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: தகவல்களின் அடிப்படையில் அரசு நிர்வாகம் செய்தல் மற்றும் அரசின் நல திட்டங்கள் அனைத்தும் பொது மக்களுக்கு போய் சேர வேண்டும் என்ற அடிப்படையில் அனைத்து அரசு துறைகளும் தங்களுடைய பல்வேறு கோப்புகளையும் தமிழ்நாடு இ-சேவை மையத்திற்கு கணினி வழித் தகவல்களாக அனுப்ப வேண்டும். அவ்வாறு பெறப்படும் தகவல்களை ஆய்வு செய்தல், துறைகளுக்கிடையே பரிமாற்றம் உள்ளிட்ட தகவல் பாதுகாப்பு பணிகளை தமிழக அரசு மேற்கொள்ளும். இதன் மூலம் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும்.

சம்பந்தபட்ட அரசு துறைகளில் இணை இயக்குநர் அந்தஸ்தில் உள்ள அதிகாரியை நியமித்து கனினி வழித்தகவல் பரிமாற்றம் செய்ய வேண்டும். மேலும் தமிழக அரசு துறைகள் அனைத்தும்,  பொதுமக்களின் ஆதார் எண்களை சேகரிக்க கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆதார் இணையதளத்தில் வெளியாகும் திட்டங்கள் மற்றும் சேவைகள் தகுதிவாய்ந்த பயனாளர்களுக்கு சென்றடைய துறை  நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். எனவே அரசின் 21 துறைகளும் ஆதார் எண்களை சேகரித்து வருகிற டிசம்பர் 31ம் தேதிக்குள் ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: