சாத்தனூர் அணையில் ₹55 கோடியில் புதிய ஷெட்டர்கள் அமைக்கும் பணி

*மத்திய குழுவினர் ஆய்வு

தண்டராம்பட்டு : சாத்தனூர் அணையில் ₹55 கோடியில் புதிய ஷெட்டர்கள் அமைக்கும் பணியை மத்திய குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தின் முக்கிய பொழுதுப்போக்கு சுற்றுலா தலமாக சாத்தனூர் அணை அமைந்திருக்கிறது. மிக பிரமாண்டமான பரப்பளவில், இயற்கை செழுமை மிக்க மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த அணை பொன்விழா கண்ட சிறப்புக்குரியது. மேலும், 119 அடி உயரம் கொள்ளளவு கொண்ட சாத்தனூர் அணை மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் அமைந்துள்ளது.

இந்நிலையில், சாத்தனூர் அணையில் உலக வங்கி நிதியுதவி ₹55 கோடி செலவில் புதிதாக 20 ஷெட்டர்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளை மத்திய நீர்வள ஆணையம் ஆனந்த்பிரகாஷ் கண்டியால் தலைமையில், துணை இயக்குனர் பிரபாத்குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து, சாத்தனூர் அணை காவல் நிலையம் பின்புறம் பொதுப்பணித்துறை அலுவலர்கள் குடியிருப்பு ₹13 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டனர். அப்போது, கண்காணிப்பு பொறியாளர் முத்தையா, செயற்பொறியாளர் மகேந்திரன், உதவி செயற்பொறியாளர் அறிவழகன், உதவி பொறியாளர் சிவகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories: