ஆவடி ராணுவ தொழிற்சாலையில் ரூ.7,523 கோடியில் 118 ராணுவ டாங்க்குகள்: ஆர்டர் அளித்தது பாதுகாப்பு அமைச்சகம்.!

சென்னை: ஆவடி ராணுவ தொழிற்சாலையில் 118 ராணுவ டாங்க்குகள் தயாரிக்க பாதுகாப்பு அமைச்சகம் ஆர்டர் அளித்தது. ரூ.7,523 கோடியில் ராணுவ டாங்க்குகளை தயாரித்து வழங்க ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக மோடி தலைமையிலான மத்திய அரசு மேக் இன் இந்தியா திட்டத்தை உருவாக்கியது.

பாதுகாப்பு அமைச்சகம் மேக் இன் இந்தியாவை ஊக்குவிக்கும் விதமாக இந்திய ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்களை உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டின் சென்னை அருகே உள்ள ஆவடி கனவாகன தொழிற்சாலையில்  இருந்து 7,523 கோடி ரூபாய்க்கு இந்திய ராணுவத்திற்கு 118 அர்ஜுன் எம்.கே.1ஏ என்ற பீரங்கி டாங்கிகளை வாங்குவதற்கு ஆர்டர் செய்துள்ளது. இந்தத் தகவலை பாதுகாப்பு அமைச்சகத்தின் முதன்மை செய்தி தொடர்பாளர் பாரத் பூஷண் பாபு தெரிவித்துள்ளார்.

Related Stories: