வரும் 30ம் தேதிக்குள் குடிநீர் வரி செலுத்த வேண்டும்: வாரியம் உத்தரவு

சென்னை: சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம், வரி செலுத்துவோர் மற்றும் நுகர்வோர்களிடம் வரும் 30ம் தேதிக்கு முன்னதாக வரியையும், கட்டணங்களையும் செலுத்தும்படி கேட்டுக் கொள்கிறது.

நுகர்வோர்கள் வரியையும், கட்டணங்களையும், சென்னை குடிநீர் வாரியத்தின் தலைமை அலுவலகத்திலும், பகுதி அலுவலகங்களிலும் அல்லது பணிமனை வசூல் மையங்களிலும் மற்றும் அரசு இ-சேவை மையம் அல்லது இணையதளத்தின் வாயிலாக வாரியத்தின் வலைதள முகவரி https:chennaimetrowater.tn.gov.in உபயோகப்படுத்தியும் செலுத்தலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>