பூண்டி ஒன்றியம், 3 வது வார்டு ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு 7 பேர் வேட்புமனு தாக்கல்

திருவள்ளூர்: பூண்டி ஊராட்சி ஒன்றியம் 3 வது வார்டு மாம்பாக்கம் பகுதி ஒன்றிய குழு உறுப்பினராக குமார் என்பவர் பதவி வகித்து வந்தார். இவர் கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் உயிரிழந்தார். இதையடுத்து இந்த ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த 15 ம் தேதி வேட்புமனு தாக்கல் துவங்கியது. கடைசி நாளான நேற்று பூண்டி ஊராட்சி ஒன்றியம் 3-வது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.ஜெ.கோவிந்தராசன் எம்எல்ஏ முன்னிலையில் திமுக வேட்பாளர் ஆர்.காண்டீபன் உதவி தேர்தல் அலுவலர் மகேஷ்பாபுவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதேபோல் அதிமுக கூட்டணி சார்பில் மாவட்ட செயலாளர் சிறுனியம் பி.பலராமன் முன்னிலையில் புரட்சிபாரதம் கட்சி வேட்பாளர் காயத்ரி லட்சுமிகாந்தன் வேட்புமனு தாக்கல் செய்தார். அமமுக சார்பில் செல்லையன் வேட்பு மனு தாக்கல் செய்தார். மேலும் சுயேட்சையாக 4 பேர் மனுத்தாக்கல் செய்தனர். ஆக மொத்தம் 7 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

திருவாலங்காடு ஒன்றியம்: திருத்தணி அடுத்த திருவாலங்காடு ஒன்றியம் வார்டு எண் 1 பொன்பாடியில் வார்டு கவுன்சிலார் சுந்தராம்மாள். இவர் இறந்துவிட்டதால் அந்த வார்டுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி திமுக சார்பில் அம்மு (38) நேற்று மனுதாக்கல் செய்தார். திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி தலைமை வகித்தார். அதிமுக சார்பில் வாணிஸ்ரீ திருவாலங்காடு அதிமுக ஒன்றிய செயலாளர் சக்திவேல் தலைமையில் வட்டாரவளர்ச்சி அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். அமமுக சார்பில் கோவிந்தம்மாள் மற்றும் மாற்றுவேட்பாளர் அனுராதா, வேட்புமனு தாக்கல் செய்தனர்.

144 பேர் வேட்பு மனு: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. இதேபோல், திருவள்ளூர் மாவட்டத்திலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு உடல்நிலை சரியில்லாமல் இறப்பு உள்பட பல்வேறு காரணங்களால் ஊராட்சி மன்ற தலைவர்கள் 4, ஒன்றிய குழு உறுப்பினர்கள் 4, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 30 என மொத்தம் 38 இடங்கள் காலியாக உள்ளன. இந்த காலியிடங்களுக்கு வரும் அக்டோபர் 9ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

Related Stories: