ஆஸ்திரேலியாவின் பல நகரங்களை அடுத்தடுத்து உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்.. ரிக்டர் அளவு கோளில் 6.0,5.8,4.0 ஆக பதிவானது!!

சிட்னி : ஆஸ்திரேலியாவின் பல நகரங்களை அடுத்தடுத்து உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.ஆஸ்திரேலிய நேரப்படி காலை 9 மணிக்கு விக்டோரிய மாகாணத்தை ரிக்டர் அளவில் 6.0 அளவிலான நிலநடுக்கம் தாக்கியது. இதையடுத்து மெல்போர்ன் நகரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோளில் இது 5.8 ஆக பதிவாகி இருப்பதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடும் அதிர்வலைகளின் எதிரொலியாக தெற்கு யாரா என்ற பகுதியில் உள்ள பல கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன. சுவர்கள் இடிந்து விழுந்ததால் மக்கள் கட்டிடங்களை விட்டு வெளியேறி திறந்தவெளிகளில் தஞ்சம் அடைந்தனர்.

நிலநடுக்கத்திற்கு பிறகும் பலமான அதிர்வுகள் தொடர்ந்ததால் மக்கள் வீடுகளுக்குள் செல்லாமல் சாலைகளிலேயே கூடி நின்றனர்.சில கட்டிடங்கள் இடிந்தாலும் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.குவாட் உச்சி மாநாட்டிற்காக அமெரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், பூகம்பம் குறித்த செய்தி தமக்கு கவலை அளிப்பதாக கூறியுள்ளார்.தேவைப்படும் அனைத்து மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள துணை பிரதமருக்கும் அமைச்சர்களுக்கும்  உத்தரவிட்டுள்ளதாக மோரிசன் வாஷிங்டனில் தெரிவித்துள்ளார்.ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு நகரமான Mansfield 10 கி.மீ. ஆழத்தில் மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள முழு சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

Related Stories: