தெலங்கானாவில் மலபார் குழுமம் ரூ.750 கோடி முதலீடு

சென்னை: உலகின் முக்கிய நகைக்கடை குழுமங்களில் ஒன்றான மலபார் கோல்டு மற்றும் டைமண்ட்ஸ், தெலங்கானாவில் உற்பத்தி தொழிற்சாலைகள் மற்றும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ரூ.750 கோடி முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. தொழில்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் கே.டி.ராமாராவ் மற்றும் மலபார் குழுமத்தின் தலைவர் எம்.பி.அகமது ஆகியோர் ஐதராபாத்தில் பங்கேற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதில் மலபார் குழுமம் எம்.டி (இந்தியா ஆபரேஷன்ஸ்) ஓ.ஆஷர், துணை தலைவர் கே.பி.அப்துல் சலாம், தலைமை நிதி அதிகாரி எஸ்.ராமகிருஷ்ணன், சில்லறை விற்பனை தலைவர் (இந்தியாவின் மற்ற பகுதிகள்) பி.கே.சிராஜ் ஆகியோர் மலபார் குழுமம் சார்பிலும், ஜெயேஷ் ரஞ்சன், தொழில்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பம் முதன்மை செயலாளர், தொழில்துறை மற்றும் தகவல்தொழில்நுட்ப துறையின் மூத்த அதிகாரிகள் தெலங்கானா அரசின் சார்பிலும் பங்கேற்றனர். மலபார் குழுமத்தின் புதிய தொழிற்சாலை ஐதராபாத்தில் உள்ள தொழிற்பூங்காவில் தொடங்கப்படும். இந்த திட்டத்திற்கான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் அமைச்சர் கே.டி.ராமாராவ் வழங்கினார். இந்த திட்டம் முடிந்தவுடன் குறைந்தது 2500 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். ஏற்கனவே, தெலங்கானாவில் மலபார் குழுமம் தனது 15 சில்லறை விற்பனை ஷோரூம்களில் 1000 பேரை வேலைக்கு அமர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories:

>