மின்வாரிய அதிகாரிகளுடன் அமைச்சர் நாளை ஆலோசனை

சென்னை: தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழக தலைமையகத்தில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நாளை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இதன் காரணமாக அனைத்து மண்டல பகிர்மான பிரிவு தலைமைப் பொறியாளர்கள் மற்றும் மின் பகிர்மான வட்ட கண்காணிப்புப் பொறியாளர்கள் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில், மின்னகத்தில் பெறப்படும் புகார்கள், சீரற்ற மின் விநியோகம் செய்யும் மின்மாற்றிகளின் எண்ணிக்கை, கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை 30 நிமிடங்களுக்கு மேலாக மின்தடை ஏற்பட்ட பகுதிகள், மற்ற பகிர்மான பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்படும் என தெரிகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories:

>