கோயில் நிலம் கண்டறியும் வகையில் ரோவர் கருவியின் மூலம் வரைபடம்

சென்னை: இந்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் கூறுகையில், ‘கோயில்கள் அறக்கட்டளைகளுக்கு சொந்தமான அசையா சொத்துக்கள், விவசாய நிலங்கள், காலிமனைகள், காலியிடங்கள் என அனைத்துக்கும் அளவீடு செய்து வரைபடம் தயாரிக்கும் பணி நவீன  தொழில்நுட்பத்தின் அடிப்படையில் ரோவர் கருவிகளை கொண்டு தொடங்கியுள்ளது.

இக்கருவியை கோயிலுக்கு சொந்தமான இடத்தில் நிறுவும்போது செயற்கைகோள் மூலம் அந்த இடத்தின் வரைபடம் நமக்கு கிடைத்துவிடும். விரைவில் இப்பணி முடிக்கப்பட்டு அதுதொடர்பான விவரங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்படும்.

இதன்மூலம் கோயிலுக்கு சொந்தமான அசையா சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டு கோயில் வசம் சுவாதீனம் பெறப்படும்’ என்றார்.

Related Stories:

>