தெலுங்கானாவில் சாப்பிட மறுத்த 4 வயது குழந்தையை கொடூரமாக தாக்கி துன்புறுத்தும் தந்தை : வேடிக்கை பார்த்த சித்தி!!

ஹைதராபாத் : தெலுங்கானாவில் சாப்பிட மறுத்த 4 வயது குழந்தையை தந்தை கொடூரமாக தாக்கி துன்புறுத்தும் வீடியோ காட்சி இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. தெலுங்கானா மாநிலம் மேடக் நகராட்சியைச் சேர்ந்தவர் நாகராஜ், டிராக்டர் ஓட்டுநரான இவர், முதல் மனைவி உயிரிழந்ததை அடுத்து 4 வயது மகளுடன் 2வது திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சாப்பிட மறுத்த தனது 4 வயது மகளை நாகராஜ் மது போதையில் கொடூரமாக அடித்து துன்புறுத்துகிறார்.

சித்தி அதனை வேடிக்கை மட்டுமே பார்க்கிறார்.காண்போர் மனதை பதைபதைக்க வைக்கும் இந்த காட்சிகள் இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இது தொடர்பாக குடியிருப்பு வாசிகள் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து கொடூர தந்தை மட்டும் சித்தியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.சாப்பிட மறுத்ததால்தான் குழந்தையை தாக்கியதாக தந்தை மன்னிப்பு கோரினார்.இதனையடுத்து மனநல ஆலோசனை பெற்றுக் கொள்ளுமாறு கூறி போலீசார் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Related Stories:

>